202202011943328162 Tamil News MK Stalin Chief Minister Tamil Nadu Union Minister of SECVPF
இந்தியாஇலங்கைசெய்திகள்

மீனவர்கள் கைது! – அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்

Share

தமிழக மீனவர்கள் கைது தொடர்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

குறித்த கடிதத்தில்,

16-11-2022 அன்று இரவு தமிழக மீனவர்கள் 4 பேர் உள்பட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 198 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி சிறையில் அடைக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், சேதப்படுத்தப்படுவதும், மீன்பிடித் தொழிலை முழுமையாக நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது.

இந்திய தரப்பில் இருந்து பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டபின்னரும் 100 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது இலங்கை வசம் உள்ளது.

தற்போது இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களின் மீன்பிடி படகினையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என்று முதலமைச்சர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

#India

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...