tamilni 36 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு தப்பி ஓட கோட்டாபயவுக்கு கிடைத்த வாய்ப்பு ரணிலுக்கு கிடையாது

Share

நாட்டை விட்டு தப்பி ஓட கோட்டாபயவுக்கு கிடைத்த வாய்ப்பு ரணிலுக்கு கிடையாது

நாட்டின் நிலைமை தொடர்பில் ஆழமாக சிந்தித்து செயற்படாவிட்டால் நாட்டை விட்டு தப்பிச் செல்ல கோட்டாபயவுக்கு கிடைத்த வாய்ப்பு கூட ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஆசியாவிலேயே மின் கட்டணம் உயர்வாகக் காணப்படும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது. 30 பில்லியன் ரூபா எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததன் காரணமாக மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அவ்வாறு மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் தென் ஆசியாவிலேயே உயர் மின் கட்டணத்தை கொண்ட நாடாக இலங்கை விளங்கும்.

நாட்டின் நிலைமை தொடர்பில் அடுத்த 100 நாட்களுக்கு ஆழமாக சிந்தித்து செயற்படாவிட்டால் கோட்டாபய ராஜபக்சவுக்கு நாட்டிலிருந்து தப்பிச் செல்ல கிடைத்த வாய்ப்பு கூட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்காது.

பொருட்களின் விலை அதிகரிப்புடன், அடக்குமுறைகளும் அதிகரித்து வருகின்றன. அடக்குமுறைகளால் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்படும் இந்த நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் மாத்திரமல்ல, எந்தவொரு சர்வதேச அமைப்பும் உதவ முன்வராது.

இவற்றை மூடி மறைத்து ஊடகப்பிரிவின் ஊடாக எவ்வாறான பிரசாரங்களை முன்னெடுத்து வந்தாலும், அடுத்த ஆண்டு இந்தக் காலப்பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பார்.

கியூபா, அமெரிக்கா மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்துள்ளதால் என்ன நன்மை கிடைத்துள்ளது? கடன் பெறுவதற்கும், வரி அறவிடுவதற்கும், நாட்டின் சொத்துக்களை விற்பதற்கும் மாத்திரமே அரசாங்கத்துக்கு தெரியும். மக்களின் பொருமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதனை சோதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர். உத்தேசத் தேர்தலில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஆட்சி மாற்றத்தின் பின்னர் இவை அனைத்துக்கும் இந்த அரசாங்கம் நஷ்டஈடு செலுத்த வேண்டியேற்படும்.

அடுத்த வருடம் தேர்தலுக்குரிய வருடமாகும். ஜனாதிபதித் தேர்தலை ஒருபோதும் காலம் தாழ்த்த முடியாது. அதற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் சில அமைச்சுக்களுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலங்கள் தோல்வியடையக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...