500x300 1724009 ramadoss
இந்தியாஇலங்கைசெய்திகள்

சிங்களக் கடற்படையினரின் தொடர் அத்துமீறலை அனுமதிக்காதீர்! -ராமதாஸ் கண்டனம்

Share

தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் தொடர் அத்துமீறலை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் இலங்கையின் வடக்கு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த கைதுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தனது அறிக்கையில்,

வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 5 பேரை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர். அவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி காங்கேசன் துறைமுக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது கண்டிக்கத்தக்கது. காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே அடுத்த கைது படலமும், அத்துமீறலும் நடந்திருக்கிறது.

தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் தொடர் அத்துமீறலை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது. மீனவர்களை கைது செய்ததற்காக இலங்கை அரசுக்கு மத்திய அரசுகண்டனம் தெரிவிக்க வேண்டும். இனி கைது கூடாது என்று இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் – என்று தெரிவித்துள்ளார்.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....