namal
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனநாயக ஆட்சி மாற்றமே வேண்டும்! – சபையில் நாமல் வலியுறுத்து

Share

” ஜனநாயக வழியிலான ஆட்சி மாற்றமே இடம்பெற வேண்டும். இலங்கையில் இதுவரை அவ்வாறுதான் நடந்துள்ளது. எனவே, அதற்கு அப்பால் செல்வது தவறான முன்னுதாரணமாக அமையும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

” இலங்கை வரலாற்றில் ஜனநாயக ரீதியிலான அரசியல் மாற்றமே இதுவரை இடம்பெற்றுள்ளது. இப்போது ஆட்சியை மாற்ற வேண்டும் என்று மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். இந்த போராட்டங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகளும் உள்ளன.

கோ ஹோம் கோட்டா என சிலர் கோஷம் எழுப்புகின்றனர். அவர் வீட்டுக்கு சென்றாலும் இப்பிரச்சினை தீராது. நாளை வணிகர்களை விராட்டுவார்கள், ஊரில் உள்ள கிராம சேவகர்களை விரட்டுவார்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களையும் விரட்டுவார்கள். எனவே, ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்ககூடாது.

நாடாளுமன்றத்தில் என்னை விட அரசியல் அனுபவம் வாய்ந்த பலர் இருக்கின்றார்கள். நாம் ஒன்றிணைந்து இப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வழிகளை தேட வேண்டும்.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...