1679671678 4 e1679710361988
இந்தியாஇலங்கைசெய்திகள்

கச்சத்தீவில் புத்தர் – கடற்படை விளக்கம்

Share

கச்சத்தீவு புத்தர் சிலை விவகாரம் குறித்து இலங்கை கடற்படையினர் இன்றைய தினம் (27) விளக்கமளித்துள்ளனர்.

இது குறித்துக் கடற்படையினர் தெரிவித்ததாவது” கச்சத்தீவானது சுமார்  50 கடல் மைல் தொலைவில் உள்ள  மக்கள் வசிக்காத தீவொன்றாகும். இத்தீவின் பாதுகாப்புக் கருதி  கடற்படைக் குழுவொன்று அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.

இக்கடற்படைக் குழுவினர் பாதுகாப்பு கடமைகளுக்கு மேலதிகமாக, இலங்கை கடற்படை பௌத்த சங்கத்தின் பூரண பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தயும் பாதுகாத்து வருகின்றனர்.

இத்தேவாலயமானது  வருடாந்தப்  பெருவிழாவின் போது மாத்திரமல்லாது  தினமும் சுத்தம் செய்யப்பட்டு, விளக்குகள் ஏற்றப்பட்டு, மிகுந்த பக்தியுடன் கடற்படையினர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இப்பகுதியில் பணிபுரியும் கடற்படையினர்களில் பெரும்பான்மையானவர்கள் பௌத்தர்கள் என்பதால், அவர்களின் வழிபாட்டு நடவடிக்கைகளுக்காகவே  ஒரு சிறிய புத்தர் சிலையொன்று  கடற்படையினரின் இல்லத்திற்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தேவாலயத்தைத் தவிர, இந்த தீவில் வேறு எந்த நிரந்தர கட்டுமானமும் செய்ய முடியாது என்பதால் கடற்படையினர் தற்காலிகமாக கட்டப்பட்ட இராணுவ இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர, இத்  தீவில் வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை, எதிர்காலத்தில் எந்த ஒரு விகாரையையும் கட்ட கடற்படை முயற்சி செய்யாது” இவ்வாறு கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

தர்மேந்திர பிரதான்
இந்தியா

பதவி விலகினார் கல்வி அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி...