Bus 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பேருந்தின் மீது தாக்குதல்: ஒருவர் கைது

Share

யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது தாக்குதலை மேற்கொண்டு, சாரதி மற்றும் நடந்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி பஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வேளை குறித்த பேருந்தினை இடைமறித்த கும்பல் ஒன்று பேருந்தின் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், சாரதி மற்றும் நடத்துனர் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.

அதில் சாரதி மற்றும் நடத்துனர் காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், ஏனைய நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேவேளை , பருத்தித்துறை – திருகோணமலைக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது , நெல்லியடி புறாப்பொறுக்கி சந்தி பகுதியில் வைத்து இனம் தெரியாத கும்பல் கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இன்று புதன் கிழமை அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் சாரதியால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...