284789843 557232705838174 6630191702765033949 n
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சம்பளப் பிரச்சினையால் முன்னாள் இராணுவச் சிப்பாய் சுட்டுக்கொலை!

Share

கொழும்பு, புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் சம்பளப் பிரச்சினை காரணமாக இடம்பெற்றுள்ளது என அதில் உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சம்பவத்தில் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதான முன்னாள் இராணுவச் சிப்பாயே உயிரிழந்தார்.

அத்துடன், அவருடன் இருந்த மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

உயிரிழந்த நபர், நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்குச் சென்று திரும்பும்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

கொழும்பு – 07 பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றில் பணியாற்றிய அவர்களுக்கு 3 மாதங்களுக்கான சம்பளம் வழங்காமல் பணியிலிருந்து நிறுத்திய நிலையில், அதற்கு எதிராக அவர்கள் நட்டஈடு கோரியிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் பணியாற்றிய நிறுவனத்தால் அவர்களுக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதோடு விருந்தகத்தின் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தினர் என்று நீதிமன்றில் வழக்கும் தொடரப்பட்டது.

எனினும், சம்பளம் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என உயிரிழந்த நபரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...