Dinesh Gunawardena
இலங்கைஅரசியல்செய்திகள்

பதில் சொல்ல பயமா? ஊடகவியலாளர்களின் கேள்வியால் கல்வியமைச்சர் சீற்றம்!

Share

சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கல்வியமைச்சர் தினேஸ் குணவர்த்தன சீற்றமடைந்துள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்த சுசில் பிரேமஜயந்த போன்ற சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்தால் அரசாங்கத்தினால் தொடர்ந்து இயங்க முடியமா என செய்தியாளர்கள் கல்வியமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிடம் கேள்வி எழுப்பினர்.

செய்தியாளர்களின் இக் கேள்விக்கு சீற்றமடைந்த கல்வியமைச்சர், கேள்விக்கு பதிலளிக்கவில்லை.

இருப்பினும் செய்தியாளர்கள் கருத்து தெரிவிக்க அச்சமா என கேள்விக் கணைகளைத் தொடுத்தனர். இதனால் அமைச்சர் சீற்றமடைந்தார்.

பிரேமஜயந்த பதவிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் பிரேமஜயந்தவின் அமைச்சில் கல்வியமைச்சர் அவரை சந்தித்தார். கல்வியமைச்சர் சந்திப்பு முடிவடைந்து வெளியேறிய போதே இக் கேள்விகளை ஊடகவியலாளர்கள் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...

Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...