ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தொழிற்சாலையின் மூன்று மாடி கட்டடம் முழுவதும் தீ பரவிய நிலையில், நீண்ட நேர தேடுதல் நடவடிக்கைகளின் போது ஐந்து பேர் தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாகவும், அவர்களில் மூன்று பேர் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீக்காயங்களுக்கு உள்ளானதாகவும் தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம் , தீ விபத்தில் காயமடைந்த ஒரு பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தீ வேகமாக பரவியதால், மக்கள் சிக்கியிருந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் சென்றடைவது கடினமாக இருந்ததாகவும்,
இதற்காக 6 தீயணைப்புத்துறைகள் வந்திருந்த நிலையில், தீ தற்போது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக ஹோமகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தீ விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.