road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

Share

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

இன்று பிற்பகல் முதல் கடுகன்னாவை பகுதியில் காணப்பட்ட ஆபத்தான நிலை காரணமாக வாகனப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் அனுராத ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் மூடப்பட்டுள்ள வீதிகள் தொடர்பான விபரங்கள் வருமாறு:

கொழும்பு – கண்டி வீதியில் 95km – 99km வரையான கடுகன்னாவை பகுதி

அவிசாவளை – ஹட்டன் – நுவரெலியா வீதியில் 66km பகுதி

நாவலப்பிட்டி – கினிகத்தேனை 4/2 மதகுப் பகுதி

அவிசாவளை – ஹட்டன் – நுவரெலியா வீதியில் 32km பகுதி

தண்டகல – பாலம்பிட்டிய – தொலோஸ்பாகே 6km பகுதி

மாவனெல்லை – ஹெம்மாத்தகம – கம்பளை வீதியில் 19km முதல் 21km வரையான பகுதி

யட்டியாந்தோட்டை – பூனகல – மீனகல 21km பகுதி

தேதுகல – தலாம்பிட்டிய – தொலோஸ்பாகே 6km பகுதி

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...