refguee
இந்தியாஇலங்கைசெய்திகள்

மேலும் 8 பேர் தமிழ்நாட்டில் தஞ்சம்!!

Share

கிளிநொச்சி பகுதியில் இருந்து 2 குடும்பங்களைச் சேர்ந்த 1 ஆண், 5 பெண்கள், 1 ஆண் குழந்தை, 1 பெண் குழந்தை உட்பட 8 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர்.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் இவ்வாறு நேற்று முன்தினம் (27) இரவு 8 மணி அளவில் இலங்கை தலைமன்னாரில் இருந்து 1.45 லட்சம் இலங்கை பணம் கொடுத்து மர்மப்படகு மூலம் இரவு 10.30 மணிக்கு தனுஷ் கோடி மூன்றாம் மணல் தீடையில் இறக்கி விடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அவர்களை நேற்று காலை இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர் கிராப்ட் கப்பலில் சென்று மீட்டு தனுஷ் கோடியை அடுத்த அரிச்சல் முனை கடற்கரையில் ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

தற்போது அவர்களை மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்று விசாரணைக்குப்பின் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...