பசில் ராஜபக்சவுக்கு ஏழு மூளைகள் உள்ளன. அவர் நிதி அமைச்சரானால் நிதி நெருக்கடி தீரும் என ஆளுங்கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். இன்று பசில்தான் நிதி அமைச்சர். ஆனால் நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது.”- என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (10) உரையாற்றிய அவர்,
” பசில் வந்தால் செல்வம் பெருகும் என்றார்கள். அது நடக்கவில்லை. அதன்பின்னர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநர் ஆனால் நிதி நெருக்கடி தீரும் என்றார்கள், ஆனால் இன்று என்ன நடக்கின்றது?
பால்மா இறக்குமதியைக்கூட ஒரு வருடம் நிறுத்த வேண்டிவரும் என நிதி அமைச்சர் குறிப்பிடுகின்றார். அந்தளவுக்கு நிதி நெருக்கடி உச்சம் பெற்றுள்ளது.
எனவே. பொறுப்பான முறையில் பொருளாதாரத்தை முகாமை செய்ய வேண்டும். “ – என்றார்.
#SrilankaNews
Leave a comment