e2939c54 2a68100e untitled 850x460 acf cropped 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எரிபொருள் கிடைக்காதுவிடின் சுகாதார சேவை ஸ்தம்பிக்கும்! – வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவிப்பு

Share

எரிபொருள் கிடைப்பதற்கு ஒத்துழைக்காவிடில் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படுவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலைமை ஏற்படுமென யாழ் போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

வட மாகாணத்தில் உள்ள மக்கள் அனைவருக்குமான ஒரே ஒரு போதனா வைத்தியசாலையாக இருக்கும் எமது வைத்தியசாலை ஆளணிப் பற்றாக்குறை இருந்தபோதும் சிறப்பாக சேவையாற்றி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அண்மைக்காலமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை மையானது எல்லோரையும் போல் எம்மையும் வெகுவாகப் பாதித்துள்ளது.

அதிலும் எரிபொருள் இன்மை காரணமாகவும், அதன் சீரற்ற வழங்கல் காரணமாகவும் வைத்திய சேவை முடங்கும் ஆபத்து உருவாகியுள்ளது. இதை அனைவரும் உணரத் தலைப்பட்டுள்ளனர். ஆனாலும் சில குறுகிய நோக்கம் உள்ள, மனிதநேயம் அற்ற சிலர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பங்களை உருவாக்கி வைத்தியசாலை ஊழியர்கள் எரி பொருள் பெறுவதை தடுப்பதன் மூலம் இன்பம் காண்கின்றனர்.

இருப்பினும் சுகாதார அமைச்சு வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யும் முகமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தெரிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வைத்தியசாலை மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு மாத்திரம் எரிபொருளை. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கும் முடிவை எடுத்துள்ளது.

இது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாக இருப்பினும் அதற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு. அரச அதிபரும், பிரதேச செயலர்களும், போலீஸ் மற்றும் பாதுகாப்பு துறையினரும் மனப்பூர்வமாக முன்வரவேண்டும். அவ்வாறு இல்லையெனில் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படுவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே பொது மக்களையும் உரிய தரப்பினரையும் உணர்ந்து செயற்பட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் – என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
116511320 indoncavepig
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் உலகின் மிகப்பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு! 67,800 ஆண்டுகள் பழமை!

மனித நாகரிகத்தின் தொடக்ககால கலைத்திறனைப் பறைசாற்றும் வகையில், உலகின் மிகப்பழமையான குகை ஓவியத்தை இந்தோனேசியாவில் தொல்பொருள்...

26 696eccc62b9b4
செய்திகள்இலங்கை

முன்னாள் அமைச்சர் சாமர சம்பத்திற்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில்...

55618d90 f52f 11f0 b5f7 49f0357294ff 1
செய்திகள்உலகம்

ஜப்பான் நாடாளுமன்றம் அதிரடியாகக் கலைப்பு! பெப்ரவரி 8-ல் பொதுத்தேர்தல்: பிரதமர் சனே தகாச்சியின் அரசியல் காய்நகர்த்தல்!

ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகாச்சி (Sanae Takaichi), பதவியேற்ற மூன்றே மாதங்களில் நாட்டின்...

IMG 20230111 134430 1
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழீழ வைப்பக நகைகள் எங்கே? – நாடாளுமன்றத்தில் சிறிதரன் கேள்வி! அரசாங்கத்தின் வாக்குறுதியை நினைவூட்டல்!

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு, போர்க்காலத்தின் போது...