7667 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்பால் குழப்பம் – அறிவித்தல்களும் கிழித்தெறியப்பட்டன!

Share

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச செயலங்களின் பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்புக்களால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளது.

கல்வியங்காட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக மக்கள் பல மணி நேரம் நீண்ட வரிசைகளில் காத்திருந்த வேளை , நல்லூர் பிரதேச செயலர் , தமது பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்க வேண்டும் என எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்கு பணித்திருந்தார். அதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது.

நல்லூர் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கு நேற்றைய தினம் திருநெல்வேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட நிலையிலும் , இன்றைய தினமும் கல்வியங்காட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தினையும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கு ஒதுக்கியமையால் குழப்பங்கள் ஏற்பட்டன.

அதே வேளை கோப்பாய் பிரதேச செயலகத்தினரால் கோப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய சேவை பணியாளர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவித்தல் ஒட்டியமையால் குழப்பங்கள் ஏற்பட்டன.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த வேளை , குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய சேவை பணியாளர்களுக்கு தான் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவித்தல் ஓட்ட பட்டமையால் குழப்பம் ஏற்பட்டு அறிவித்தல்களை கிழித்தெறிந்தனர்.

அதேவேளை நேற்றைய தினமே வேலணை மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலகங்களால் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அறிவிக்கப்பட்டமையால் , அவ்விரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் குழப்பங்கள் இன்றி எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.

பிரதேச செயலர்கள் திடீர் அறிவிப்புக்களே குழப்பங்கள் ஏற்பட காரணமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

7667 3 7667 1 7667 2 7667 6 7667 8 7667 9 7667 7 7667 4

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...