image f06a3813ca
இலங்கைசெய்திகள்

படகு மூலம் வெளிநாடு செல்ல முயற்சித்த 10 பேர் கைது!

Share

சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாடு செல்ல முயற்சித்த 10 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் குருசபாடு கடற்பரப்பில் நேற்று இரவு இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த கடற்பகுதியில், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படை ரோந்து கப்பலால் சந்தேகத்துக்கு இடமானமுறையில் பயணித்த டிங்கி படகு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டது.

அந்த டிங்கி படகில், நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் 18 வயதுக்கு குறைவான நால்வர் மற்றும் டிங்கி படகுகளை இயக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் பேசாலை, உறுமலை, கிளிநொச்சி மற்றும் கந்தளாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள இலங்கை கடற்படை, பணம் சம்பாதிப்பதற்காக பாதுகாப்பற்ற கப்பல்களை பயன்படுத்தி கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்துள்ள மனித கடத்தலில் சிக்கி, நாட்டிலிருந்து சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சிப்பது மற்றும் உயிரை பணயம் வைத்து சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...

Srilankan Airlines
இலங்கை

நிறுத்தப்பட்டது இலங்கை விமான போக்குவரத்து – இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை.

மீண்டும் மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச்சூழல் காரணமாக, குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான...

manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...