பி.சி.ஆர். முடிவு வரும் வரை வெளியில் நடமாடாதீர்!
இலங்கைசெய்திகள்

ஊரடங்கு காலத்தில் 19 சேவைகளுக்கு அனுமதி!!

Share

ஊரடங்கு காலத்தில் 19 சேவைகளுக்கு அனுமதி!!

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும் இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்செய்யப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் இயங்க அனுமதிபெற்ற 19 சேவைகள் தொடர்பில் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கீழ் காணும் 19 செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1. சுகாதார சேவைகள்

2. பொலிஸ் நிலையங்கள்

3. கிராம அலுவலகர்கள்

4. அனைத்து துறைகளைச் சேர்ந்த களவிஜய அதிகாரிகள்

5. உள்ளூராட்சி அமைப்புக்கள் ( தேவையான ஆளனியுடன் இயங்க முடியும்)

6. நாளாந்த பயன்பாட்டுக்கான தேவைகள் (மின்சாரம், நீர், தொலைத்தொடர்பு விநியோகம், எரிவாயு விற்பனை நிலையம், பெற்றோல் நிரப்பு நிலையம், மோட்டார் சைக்கிள் திருத்துமிடம், சாலை, கட்டுமானப் பணி)

7. விவசாயம், கால்நடை மற்றும் மீன்பிடி ( மாவட்ட எல்லைகளைத் தாண்டாது)

8.பலசரக்கு கடைகள், பல்பொருள் அங்காடிகள் ஒன்லைன் விநியோகத்தில் செயற்படல்

9. அத்தியாவசியப் பொருள்கள் விநியோகஸ்தர்கள்

10.வெதுப்பகங்கள் (நடமாடும் விற்பனை)

11. வங்கிகள் (மட்டுப்படுத்தப்பட்ட நிதி பரிவர்த்தனை)

12. போக்குவரத்து – அத்தியாவசிய / பிற அனுமதிக்கப்பட்ட, நோயாளிகளின் அவசர தேவை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்

13. இறுதிச் சடங்குகள் – 24 மணிநேரத்தில் மேற்கொள்ளுதல், குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் (கொரோனா அற்ற மரணங்களின் போது மாத்திரமே)

14. ஓரே நேரத்தில் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியேற அனுமதிக்கப்படுவர்

15. 65 வயதிற்கு மேற்பட்டோர், நாற்பட்ட நோயாளிகள் மருத்துவ தேவைகளை தவிர்த்து வெளியில் செல்ல முடியாது

16. தனிப்பட்ட கூட்டங்களை நடாத்த முடியாது

17. தினசரி ஊழியம் பெறும் தொழிலாளிகள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்

18. சுற்றுலா தொடர்பான செயற்பாடுகளுக்கு மேலே இருந்து விலக்கு அளிக்கப்படும்

19. மாவட்ட, உள்ளூர் கொவிட் குழுக்களால் தீர்மானக்கப்பட்ட முடிவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...