download 8
செய்திகள்இலங்கை

நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிய நடைமுறை!!

Share

நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிய நடைமுறை!!

வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வரும் ஒவ்வொருவரும் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

புதிய வழிகாட்டல்களின்படி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை, அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக தீர்மானிக்கப்பட்ட ஹொட்டல்களில் தங்க வேண்டியது அவசியம்.

தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் பரிசோதனை முடிவில் கொரோனாத் தொற்றாளர் அல்ல என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை என புதிய வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றுக்கொள்ளாத ஒருவர், பரிசோதனை முடிவில் கொரோனாத் தொற்றாளர் அல்ல என உறுதிப்படுத்தப்பட்டாலும் கூட, அவர்கள் கட்டாயமாக 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டல்களில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய,...

Cyclone
இலங்கை

பசுபிக் பெருங்கடலில் உருவாகி வரும் சூறாவளி – வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்.

நாளைய தினம் நண்பகல் முதல், தற்போது நிலவும் மழை நிலைமையானது சிறிதளவு குறைவடையுமென எதிர்பார்க்க முடியும்...

pers
இலங்கை

மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம் – மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளும், பரீட்சைகளும் நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற்கொண்டு மறுஅறிவித்தல் வரை...

school closd
இலங்கை

தொடரும் சீரற்ற காலநிலை – பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், நாளைய தினம், கண்டி மாவட்டத்தின்...