Cyclone
இலங்கை

பசுபிக் பெருங்கடலில் உருவாகி வரும் சூறாவளி – வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்.

Share

நாளைய தினம் நண்பகல் முதல், தற்போது நிலவும் மழை நிலைமையானது சிறிதளவு குறைவடையுமென எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே இதனைத் தெரிவித்தார்.

ஆயினும், தற்போது பசுபிக் பெருங்கடலில் ஜப்பானுக்கு கீழ் பகுதியில் சூறாவளி ஒன்று உருவாகி வருவதாகவும், அதன் காரணமாக ஆறாம் திகதிக்குப் பிறகு மழை நிலைமை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

அதன் அடிப்படையில், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்பதுடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அதிகளவில் மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“குறித்த இந்த கொந்தளிப்பான வானிலையானது நாளை நண்பகலாகும் போது படிப்படியாக விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், தற்போது பசுபிக் பெருங்கடலில் ஜப்பானுக்கு கீழ் பகுதியில் சூறாவளி ஒன்று உருவாகி வருவதாகவும், அந்த நிலைமை ஆறாம் திகதியளவில் மீண்டும் தீவிரமடைவதுடன், காற்றின் வேகம் அதிகரித்து, மீண்டும் ஆறாம் திகதிக்குப் பிறகு சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதியில் மழை பெய்யக்கூடும்.” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...

சூறாவளி
இலங்கை

டைபூன் சூறாவளியின் தீவிரம் – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

அரசு தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தகவல்...