சூறாவளி
இலங்கை

டைபூன் சூறாவளியின் தீவிரம் – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

Share

அரசு தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தகவல் வெளியிடும் போது, நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை நாளை நண்பகலின் பின்னர் குறையும் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, நாளை நண்பகலின் பின்னர் நிலவும் மழை நிலைமை குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜப்பானுக்குத் தெற்கே பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள டைபூன் சூறாவளி தீவிரமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 06ஆம் திகதிக்குப் பின்னர் அது தீவிரமடைவதுடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் மழை பெய்யக் கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனால், சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் அடைமழை பெய்யக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...