VideoCapture 20211102 110438
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு ஆவணம் – நாளை இறுதி முடிவு!

Share

தமிழ் பேசும் கட்சிகளின் சார்பில் தயாரிக்கப்படும் கூட்டு ஆவணம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி நாளை இறுதி முடிவை எடுக்கவுள்ளது.

இதற்காக அக்கூட்டணியின் அரசியல்குழு நாளை வியாழக்கிழமை அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு கூட்டம் ‘ஒன்லைன்’மூலம் இன்று நடைபெற்றது. கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராத கிருஷ்ணன் ஆகியோர் உட்பட தலைமைக்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

13 ஆம் திருத்தம் என அறியப்படும், இலங்கை அரசியலமைப்பில் இடம் பெற்றுள்ள ஒரேயொரு அதிகார பரவலாக்கல் சட்டத்தை முழுமையாக அமுலாக்க உரிய அறிவுறுத்தல்களை, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரதான தரப்பு என்ற முறையில், இலங்கை அரசுக்கு கொடுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு , தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் சார்பாக எழுதப்பட உள்ள பொது ஆவணம் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நவம்பர் 2ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “திண்ணை கலந்துரையாடல்” முதல் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற கலந்துரையாடல்களில் முன்வைக்கப்பட்ட பல்வேறு வரைபுகளின் உள்ளடக்கங்கள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
disa
இலங்கை

கூட்டணியை குறித்து எங்களுக்கு கவலை இல்லை – திஸ்ஸ அத்தநாயக்க.

தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறுபான்மைக் கட்சிகள், தமது உரிமைகளுக்காகத் தனியானதொரு புதிய...

semmani 18
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வையிடவுள்ள சர்வதேச தரப்பினர்.

நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு, யாழ்ப்பாணம் – செம்மணிப் பகுதியில்...

சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...