sringla
செய்திகள்இலங்கை

இலங்கை வரும் இந்திய வெளியுறவு செயலாளர் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம்!

Share

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா யாழ்ப்பாணத்திற்கும் செல்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் வெளியுறவு செயலாளரின் அழைப்பின் பேரில் நாளைய தினம் இலங்கை வரும் அவர், எதிர்வரும் 5ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது இந்திய வெளியுறவு செயலாளர் ஷ்ரிங்லா, இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

மேலும், இலங்கையின் வெளியுறவு செயலாளருடனான இருதரப்பு சந்திப்பிலும் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவர் கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வார் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

இந்த பயணம் நீண்டகால உறவுகளை ஒருங்கிணைப்பதற்கும், இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...