IMG 20220310 WA0010
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தூரில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பரிதாபச் சாவு!

Share

யாழ்., புத்தூர் பகுதியில் இன்று பிற்பகல் மின்சாரம் தாக்கி கணவனும் மனைவியும் பரிதாபகரமாகச் சாவடைந்துள்ளனர்.

புத்தூர் பகுதியைச் சேர்ந்த குகப்பிரகாசம் ( வயது 59), அவரது மனைவியான சுகுணா (வயது 55) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

வீட்டிலுள்ள நீர்த் தொட்டியில் மனைவி நீர் அள்ளும்போது மின்சாரம் தாக்கியுள்ளது. அவரைக் காப்பாற்ற முயன்றவேளை கணவனும் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி இருவரும் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது இரு பிள்ளைகளில் ஒருவர் பணிக்கும், மற்றையவர் பல்கலைக்கழகமும் சென்றிருந்த நிலையில், அவர்கள் வீடு திரும்பிய பின்னரே பெற்றோர் இறந்து கிடந்ததை அவதானித்து அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...