school
செய்திகள்இலங்கை

தரம் 10 – 13 கற்றல் செயற்பாடுகள் ஆரம்பம்

Share

அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10 – தரம் 13 வரையான மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில், இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விச் செயற்பாடுகள், தற்போது பகுதி பகுதியாக தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது தரம் 10 முதல் 13 வரையான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கையில்,

கற்றல் நடவடிக்கைகளை மேல ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்து பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.
க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த வகுப்புக்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. – என்றார்.

பாடசாலைக்கு வருகைதரும் மாணவர்கள், முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது கட்டாயமாமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...