Gold
செய்திகள்இலங்கை

150,000 த்தை தொட்டது தங்கம் விலை!

Share

இலங்கையில் வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 150,000 ரூபாவை எட்டியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 139,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 கரட் தங்கம் 51,600 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், 22 கரட் தங்கம் 48,200 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.

அத்துடன், கடந்த ஆண்டு இலங்கை சந்தையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை செய்கூலியுடன் சேர்த்து 124000 ரூபாவை கடந்திருந்தது. இலங்கையில்,கொவிட் தொற்று நிலைமை தீவிரமடைய ஆரம்பித்ததாலே, தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. பொருளாதார நெருக்கடி நிலையில், தொடர்ச்சியாக தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக அறிய வருகிறது.

சந்தையில் தற்போது ஒரு பவுண் நகை வாங்க வேண்டுமானால், செய்கூலி உட்பட ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாவரை செல்கின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...