3e687ce8 35e823a1 chinasl
செய்திகள்இலங்கை

வடக்கில் மின் உற்பத்தி திட்டங்களை கைவிட்டது சீனா!

Share

சீனா வடக்கிலுள்ள தீவுகளில் முன்னெடுக்க இருந்த மின்னுற்பத்தி திட்டங்களை இடைநிறுத்தியுள்ளது. வடக்கில் நெடுந்தீவு, அனலை தீவு மற்றும் நயினாதீவில் இச்செயற்றிட்டத்தை ஆரம்பிக்க இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sino Soar Hybrid Technology என்ற சீன நிறுவனம் பாதுகாப்பு தொடர்பாக மூன்றாம் தரப்பு முன்வைத்த விடயங்களை கவனத்தில் கொண்டே இச்செயற்றிட்டத்தை இடைநிறுத்தியதாக சீன தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இலங்கையில் மின்னுற்பத்தி திட்டத்தை கைவிட்ட சீன நிறுவனம் கடந்த 29 ஆம் திகதி மாலைத்தீவிலுள்ள 12 தீவுகளில் சூரிய மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்திய விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இச்செயற்றிட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, இச்செயற்றிட்டம் தொடர்பாக விழிப்புடன் இருப்பதாக இந்தியா பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...