photo4jpg
செய்திகள்இந்தியா

குளத்தில் மூழ்கிய கார்- 4 பேர் சாவு

Share

நேபாளத்தில் கார் குளத்தில் மூழ்கி 4பேர் சாவடைந்துள்ளனர்.

நேபாளத்தின் ரவுதகத் மாவட்டம் இந்தியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள கவுர்-சந்திராபூர் வீதியில் நேற்று இரவு சென்று கொண்டிருந்த ஒரு கார், திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வேதி யோரத்தில் உள்ள குளத்தில் விழுந்து மூழ்கியது.

இதுபற்றி தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் காரில் இருந்த 4 பேரும் சாவடைந்துள்ளனர் .

சாவடைந்தவர்கள் இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தினாநாத் (25), அருண் (30), திலிப் (28), அமித் (27) என்பது தெரியவந்துள்ளது.

விபத்தில் இந்தியர்கள் சாவடைந்ததை குறித்து ரவுதகத் காவல்துறை இந்திய காவல்துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தது.

அதன்பின்னர் சாவடைந்த உறவினர்கள் இன்று காலையில் வந்து உடல்களை அடையாளம் காட்டினர். குளத்தில் விழுந்த கார் கிரேன் மூலம் வெளியே எடுக்கப்பட்டது.

விபத்து குறித்து நேபாள பொலிஸார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

sivakarthikeyan vijay
இந்தியா

முதலமைச்சரை சந்தித்த சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். குறித்த, சந்திப்பின்...

wedding
இந்தியா

ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே திருமணம்!

இந்தியாவில் ஆண்டுக்கு இந்திய மதிப்பில் ரூ.11 இலட்சம் வருமானம் பெரும் பெண் ஒருவர், தமக்கு வாழ்க்கைத்...

vijay sad
இந்தியா

முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதிலடி !

கரூருக்கு சென்ற தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையான விமர்சனங்களினை...