6b7e6e3e4b7f0f27205a010a6eaa99f35092a93f
செய்திகள்இலங்கை

யாழில் கொவிட் தொற்றால் மேலும் 6 பேர் சாவு!!

Share

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளம் ஊடகவியலாளர் இன்று உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நெடுந்தீவைச் சேர்ந்த 70 வயது ஆண் ஒருவரும், பருத்தித்துறையைச் சேர்ந்த 72 வயது ஆண் ஒருவரும், கந்தர்மடத்தைச் சேர்ந்த 79 வயது ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அல்வாயைச் சேர்ந்த 75 வயது ஆண் ஒருவர் மந்திகை ஆதார மருத்துவமனைத் தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் ஒருவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவரது விவரங்கள் கிடைக்கவில்லை.

இந்த உயிரிழப்புகள் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...