1742664 sslv rocket
தொழில்நுட்பம்

எஸ்.எஸ்.எல்.வி. டி1 ராக்கெட் திட்டம் தோல்வியில்

Share

பூமியை கண்காணிக்கும் இ.ஒ.எஸ்-02 செயற்கை கோள் மற்றும் இந்தியாவில் உள்ள 750 மாணவர்கள் உருவாக்கிய ஆசாடிசாட் என்னும் சிறிய செயற்கை கோள் ஆகிய 2 செயற்கை கோள்களுடன் எஸ்.எஸ்.எல்.வி.-டி1 ராக்கெட்டை இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்தியது.

ராக்கெட்டில் இருந்து செயற்கை கோள்களை பிரிக்கும் பணிகளை மேற்கொண்டபோது, செயற்கை கோள்களில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. கடைசி நிலையில் ஏற்பட்ட தகவல் இழப்புதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

தகவல் இழப்புக்கான காரணத்தை கண்டறிய இஸ்ரோ விஞ்ஞானிகள் நீண்ட நேரம் போராடினார்கள். ஆனால் அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை.

இதையடுத்து எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘இந்த ராக்கெட், செயற்கைக்கோள்களை 356 கிமீ வட்ட சுற்றுப்பாதைக்கு பதிலாக 356 கிமீ x 76 கிமீ நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.

அந்த செயற்கைக்கோள்களை இனி பயன்படுத்த முடியாது. சென்சார் செயலிழப்பே தோல்விக்கு காரணம். சென்சார் செயலிழப்பைக் கண்டறிந்து, செயற்கைக் கோள்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது.

குழு அமைக்கப்படடு தோல்வி குறித்து ஆராயப்படும். விரைவில் எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட் உருவாக்கப்படும்’ என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
s.media
தொழில்நுட்பம்

சமூக வலைத்தளங்கள் முடக்கம் – பயனர்கள் அவதி .

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உலகளாவிய ரீதியில் முகநூல் சமூக வலைத்தளம் இவ்வாறு முகநூல் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...