Flag of the Peoples Republic of China.svg 1
அரசியல்இலங்கைசெய்திகள்

நிபந்தனைகளுக்கு இணங்கோம்! – சீனா அதிரடி

Share

சீனா எப்போதும் இலங்கையின் அரசியல் நிபந்தனைகளுக்கு அமைய எந்தவித உதவிகளையும் செய்யவில்லை. அவ்வாறான நிலைப்பாட்டை சீனா ஒருபோதும் கொண்டிருக்காது என சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜான் அந்நாட்டு செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதலீடுகளை முன்னெடுப்பது மற்றும் நிதி உதவிகளை செய்வது தொடர்பான விடயங்களில் நாங்கள் ஒருபோதும் அரசியல் சுயநலத்துடன் செயற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

கடன் நிதி உதவிகள் விடயத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சரின் கருத்தை வரவேற்கின்றோம், சீனாவின் உதவிகளை வரவேற்பதாகவும், நாம் இரு தரப்பும் நட்பு நாடுகள் என அவர் தெரிவித்துள்ள கருத்தானது ஆரோக்கியமானது என்றார்.

குறிப்பாக இலங்கையில் சீனாவின் கடன்பொறி என பயன்படுத்தப்படும் சொல்லாடலை வலுவாக நிராகரிக்கும் கருத்து இதுவாகும். அதுமட்டுமல்ல சீனா எப்போதும் இலங்கையின் அரசியல் நிபந்தனைகளுக்கு அமைய எந்தவித உதவிகளையும் செய்யவில்லை. அவ்வாறான நிலைப்பாட்டை சீனா கொண்டிருக்காது என்றார்.

இலங்கையில் முதலீடுகளை முன்னெடுப்பது மற்றும் நிதி உதவிகளை செய்வது தொடர்பான விடயங்களில் நாங்கள் ஒருபோதும் அரசியல் சுயநலத்துடன் செயற்படவில்லை. தற்போது இலங்கை பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் மற்றும் சவால்களை சீனா முழுமையாக புரிந்துகொண்டுள்ளது. இந்த பிரச்சினைகளை உரிய விதத்தில் தீர்ப்பது குறித்து உரிய நிதி அமைப்புகளிற்கு சீன ஒத்துழைப்புகளை வழங்குகின்றது. அத்துடன் உறுதியான தீர்வை பெற்றுக்கொடுக்க நானும் பணியாற்றுகின்றோம்.

மேலும் எங்கள் சக்திக்கு உட்பட்ட வகையில் நாங்கள் இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு உதவி வழங்கி வந்துள்ளோம். சீனா தொடர்ந்தும் இலங்கையுடன் நெருக்கமான நட்புறவை கையாண்டு ஒத்துழைப்புக்களை வழங்கும் என்றார்.

#china

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...