IMG 20221013 WA0033 1068x601 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பனம்கள் தேடியும் கிடைக்கவில்லை – யாழில் புலம்பிய லொஹான்

Share

யாழ்ப்பாணத்தில் பனைமரங்கள் இருக்கின்றபோதும் பனம்கள்ளை பெறுவதற்கான வழிவகைகள் தனக்கு கிடைக்கவில்லை என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நகைச்சுவையாக தெரிவித்தார்.

பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டிடம் இன்றைய தினம் கைதடியில் திறந்து வைக்கப்பட்டபோது கருத்து தெரிவித்தபோதே லொகான் ரத்வத்த நகைச்சுவையாக இதனை தெரிவித்தார்.

பல்லாயிரக்கணக்கான பனைமரங்கள் உள்ள இடமாக யாழ்ப்பாணமும் காணப்படுகின்றது. இன்று காலை நாங்கள் வந்து பனம் கள்ளை தேடியபோது யாழ்ப்பாணத்தில் பனம் கள்ளு எனக்கு கிடைக்கவில்லை என்றார்.

மேலும் தெரிவிக்கையில்,

இங்கே உற்பத்தி செய்யப்படும் பனை உற்பத்தி பொருட்களுக்கு மேற்குலக நாடுகளில் அதிக கேள்வி காணப்படுகின்றது, பனை அபிவிருத்தி கைத்தொழிலானது மிகவும் அபிவிருத்தி அடைவதோடு வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற உதவ வேண்டும்.

45 வருடங்களாக வாடகை வீட்டில் செயல்பட்டுவந்த பனை அபிவிருத்தி சபைக்கு இன்றைய தினம் சொந்தமானதொரு புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...