download 6
அரசியல்இலங்கைசெய்திகள்

புலம்பெயர் குழுக்கள் தொடர்பில் ஆராய விசேட குழு!

Share

புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நீதியமைச்சர் விஜேதாச ராஜபசஷ , முன்னாள் பிரதம நீதியரசர் அசோக் டி சில்வா தலைமையில் மூவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் டெலிகொன்பரன்ஸ் முறை மூலம் பேச்சுகளை மேற்கொண்ட பின்னரே, அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

கனடாவை சேர்ந்த நீதி மற்றும் சமத்துவத்துவத்துக்கான கனடா அமைப்பினருடனும்,
ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் புலம்பெயர் அமைப்புகளுடனும் நிதி அமைச்சர் பேச்சுகளை நடத்தியிருந்தார்.

தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும், வடக்கு, கிழக்கில் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதற்கு முடிவு காணவேண்டுமென்ற இரண்டு முக்கிய கோரிக்கைகளை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் முன்வைத்துள்ளன. சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவை வலுப்படுத்தவேண்டுமெனவும் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளதை உறுதி செய்துள்ள நீதி அமைச்சர் அவர்களுடைய கரிசனைகளை கவனமாக செவிமடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் மூவரடங்கிய குழுவை நியமித்துள்ளதாகவும் அந்த குழுவை வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விடயத்துக்கு தீர்வை காண்பதற்கான பொறுப்பை அடுத்த தலைமுறைக்கு வழங்க கூடாது துயரங்களுக்கு விரைவில் தீர்வை காண்பதற்கான நாட்டை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...

sl pass port
இலங்கை

போலியான கடவுச்சீட்டு – பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்றைய தினம் நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போது, முன்னாள் நாடாளுமன்ற...

arested
இலங்கை

மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் கைதான நபர்கள் – விசாரணையில் வெளியான அதிர்ச்சித்தகவல்கள்!

இன்று பிற்பகல், மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டுச் சுவருக்கு அருகே நடத்தப்பட்ட சோதனையின் போது கைதிகளுக்கு போதைப்பொருள்...