IMG 20220820 WA0004
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பிரிட்டிஷ் கவுன்சிலின் ஏற்பாட்டில் விருது வழங்கும் நிகழ்வு

Share

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சிலின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விசேட செயற்திட்டத்தின் விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் கல்வி நிறுவனங்களினை உள்ளூர் மற்றும் சர்வதேச இணைப்புகளினூடாக வலுப்படுத்தலை நோக்கமாகக் கொண்டு பிரிட்டிஷ் கவுன்சில் GGP-UNICYCLE 2022 என்கிற செயற்றிட்டத்தை மாணவர்களை மையமாக முன்னெடுத்தது.

பால்நிலை மற்றும் அதுசார்ந்த விழிப்புணர்வு, காடாக்கல் மற்றும் காடழிப்பு சார்ந்த விழிப்புணர்வு, சேதன விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு, பிளாஸ்டிக் மீள் சுழற்சி என்பன இந்த செயற்றிட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா, பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள்,செயல் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செயற்றிட்டத்துடன் தொடர்பான ஆவணப்படமொன்றும் ஆற்றுகையொன்றும் செயற்றிட்டத்தில் பங்கெடுத்த மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
yositha
இலங்கை

யோஷிதவை வசமாக சிக்க வைத்த முன்னாள் காதலி!

மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...

லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...