சித்திரவதைக்குள்ளாகும் சாந்தன்! ரணிலுக்கு பறந்த கடிதம்
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வகட்சி அமைச்சு பட்டியல் ஜனாதிபதிக்கு சமர்ப்பிப்பு!

Share

சர்வகட்சி அரசில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அமைச்சுப் பதவிகளை வகிக்கக்கூடிய பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுத்துள்ளது.

அமைச்சுகளுக்கான பட்டியலில் மூத்த மற்றும் இளம் உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களின் பட்டியல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசில் அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்றும், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சாகர காரியவசம் கூறினார்.

சர்வகட்சி அரசின் முக்கிய பொறுப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த பொறுப்புக்களை நிறைவேற்றி மக்களுக்கு சேவையாற்றுவது கட்சியின் பொறுப்பு எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிரசன்ன ரணதுங்க, ஜனக பண்டார தென்னகோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, சி.பி. ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன, நாமல் ராஜபக்ச, ரமேஷ் பத்திரன, பந்துல குணவர்தன, சனத் நிஷாந்த மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...