pass
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பெற விசேட கவுன்டர்

Share

அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கவுன்டர் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

குறித்த நடைமுறை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான புதிய கடவுச்சீட்டைப் பெறுவதற்கு பத்தரமுல்லையில் உள்ள திணைக்கள அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் தொழில் நிமித்தம் அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டிய இலங்கையர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்தநிலையிலேயே, வேலைவாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கவுன்டர் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...