image 6483441 1 e1660383507532
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ் – தெல்லிப்பழை ஶ்ரீ துர்காதேவி தேவஸ்தான மஹோற்சவம்

Share

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை ஶ்ரீ துர்காதேவி தேவஸ்தானத்தின் மஹோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

பன்னிரண்டு நாள்கள் இடம்பெறவுள்ள மஹோற்சவம் எதிர்வரும் செப்ரெம்பர் 08 ஆம் திகதி, வியாழக் கிழமை ஆவணித் திருவோண தினத்தன்று காலை 8.30 மணிக்கு “துர்க்கா புஷ்கரணி” தீர்த்தத் தடாகத்தில் இடம் பெறவுள்ள தீர்த்தோற்சவம் மற்றும் மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ள கொடியிறக்கத்துடன் நிறைவு பெறவுள்ளது.

தினமும் முற்பகல் 9.30 மணிக்கும், பிற்பகல் 5.30 மணிக்கும் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் திருவீதி உலா இடம்பெறும்.

மஹோற்சவ காலத்தில் அம்பிகை அடியவர்கள் ஆசார சீலர்களாக, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வருகைதந்து வழிபாடியற்றி அம்பிகையின் அஷ்ட சித்திகளையும் பெற்றுய்யுமாறு தேவஸ்தான நிர்வாக சபை கேட்டுக் கொண்டுள்ளது.

image 6483441

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...