Mani and Gajend
இலங்கைசெய்திகள்

அனுமதியின்றி மதில் கட்டுமானம்! – உடன் நிறுத்த மாநகர சபை பணிப்பு

Share

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டு மதில் அனுமதியின்றி கட்டப்படுவதால், கட்டுமான பணியை உடனடியாக நிறுத்த யாழ் மாநகரசபை தீர்மானித்துள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் குறுக்கு வீதியில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிதாக வீடொன்றை நிர்மணித்துள்ளார். அந்த வீட்டு மதில் கட்டும் பணி தற்போது நடந்து வருகிறது. எனினும்,
இதற்கான அனுமதி யாழ் மாநகர சபையில் பெறப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் யாழ் மாநகரசபை அமர்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடந்த போது, இந்த மதில் விவகாரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந்த் எழுப்பினார்.

‘உங்கள் கட்சியின் தலைவர் என்பதால் அவர் அனுமதியின்றி மதில் கட்டுவதை அனுமதித்துள்ளீர்களா?’ என யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனை பார்த்து கேள்வியெழுப்பினார்.

‘அனுமதியற்ற கட்டுமானங்களை அனுமதிக்க முடியாது. அதனால் அந்த கட்டுமான பணிகளை உடனடியாக இடைநிறுத்துவதுடன், முறைப்படியான அனுமதி பெற்று கட்டுமானத்தை தொடரும்படி அறிவியுங்கள்’ என மாநகரசபை உத்தியோகத்தர்களிற்கு முதல்வர் உத்தரவிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...