IMG 20220807 WA0060
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெற்றுச் சிலிண்டர்களை திருடிய குற்றச்சாட்டில் 6 பேர் கைது!

Share

ஓட்டுமடம் பகுதியில் உள்ள லஃவ் எரிவாயு நிறுவனத்தின் களஞ்சிய சாலையை உடைத்து 52 வெற்றுச் சிலிண்டர்களை திருடிய குற்றச்சாட்டில் முதன்மை சந்தேக நபர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த சில நாள்களுக்கு முன் ஓட்டுமடம் பகுதியில் உள்ள லஃவ் எரிவாயு நிறுவனத்தின் களஞ்சிய சாலையை உடைத்து 7 லட்சத்து 80 ஆயிரம் பெறுமதியான 52 வெற்றுச் சிலிண்டர்கள் திருட்டுப் போயிருந்தன.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளி மற்றும் நாவாந்துறை பிரதேசங்களைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டடனர். சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட சிலிண்டர்களும் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்கள் விசாரணைகளின் பின் சந்தேக நபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Ranil Namal
இலங்கை

ரணிலுடன் நாமல் பேசியது என்ன?

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இந்த நடவடிக்கைகளுக்கு,...

Fire Breaks
இலங்கை

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.

  களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை சுமார் 8.30...

Prison Clash All Suspects Identified
இலங்கை

மோதலில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர் – மேலதிக நடவடிக்கைகளுக்கு தயாராகும் சிறை அதிகாரிகள்.

  நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன்...

Disappearance
இலங்கை

விடுதலை புலிகளின் பெயரில் கடத்தல் மற்றும் கப்பம் பெறல் – கொழும்பில் நடந்த சம்பவங்கள்.

முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின்...