Tissa Attanayake
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டில் எந்த மாற்றமும் இல்லை!

Share

இலங்கையின் அரசியல் புலத்தில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்பட வில்லை, தொடர்ந்தும் மாற்றங்கள் ஏற்படும் சாத்தியங்கள் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க அண்மையில் தெரிவித்தார்.

கண்டியில் நடந்த வைபவம் ஒன்றை அடுத்து அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

கடந் 9ம் திகதி நடந்த சம்பவங்களை அடுத்து அரசியலில் புதுவிதமான மாற்றங்களை மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து புதிய போத்தலில் பழைய மதுவை ஊற்றி கதைதான் நடந்து வருகிறது.

நிதி அமைச்சை பிரதமர் பொறுப் பேற்ற போதும் ஏனைய அமைச்சர்கள் ஏற்கனவே இருந்த அமைச்சர்கள்தான் தொடர்ந்தும் உள்ளனர். அதே அமைச்சர்களும் அதிகாரிகளும் எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஒரு ட்ரிலியன் பணம் புதிதாக அச்சிட உள்ளதாக நிதி அமைச்சர் முதலாவதாக அறிவித்துள்ளார். இது நல்ல சகுனம் அல்ல. மேலும் மேலும் பணவீக்கம் ஏற்பட்டு மக்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் ஒரு நிலையேயாகும். புதிதாக பணம் அச்சிட்டு அரசாங்கத்தை நடத்துவது என்பது எவராலும் செய்ய முடிந்த காரியமாகும். அதற்கு ஆட்சியையோ பாராளுமன்றமோ அமைச்சுக்களோ தேவையில்லை.

இன்னும் பழைய ஆட்சியாளர்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளே நடக்கின்றன.

நாடும் நாமும் எதிர்பார்த்தது அரசியல் அமைப்பில் 19 பிளஸ் திருத்தத்தையாகும். அதாவது 19 வது திருதத்தை விடவும் சக்தி மிக்க ஒன்றை எதிர்பாத்த்தோம் . ஆனால் உத்தேச 20 வது திருத்தம் அப்படி எதையும் திருப்திப்படுத்துவதாக இல்லை.

நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதை எதிர்பார்த்தனர். அது நடப்பதாக இல்லை. 21ம் திருத்தத்தில் நல்ல அம்சங்கள் இருப்பின் நாம் அதை ஆதரிப்பதில் பிரச்சினை இல்லை.

ஐ.ம.ச நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுச நாணயக்கார முதலானோர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு தக்க நியாயம் தெரிவிக்காத பட்சத்தில் அவர்கள் கட்சியால் ஒழுக்காற்று விசாரணைக்கு உற்படுத்தப்படுவர் என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...