VideoCapture 20220125 085008 1
செய்திகள்இந்தியாஇலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் விடுதலை!

Share

அண்மையில், இலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 55 இந்திய மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றினால் இன்றையதினம் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த டிசெம்பர் மாதம் 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் கைதான குறித்த மீனவர்கள் தொடர்பில் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்றையதினம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 55 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மீனவர்கள் அனைவருக்கும் ஆறு மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஐந்து வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

VideoCapture 20220125 084959 1

இதேவேளை, அவர்களது கைவிரல் அடையாளங்களும் பதிவுசெய்யப்பட்டன. அத்துடன் அவர்களை இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக இந்தியாவிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் ஜெ.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கைதானவர்களில் ஒருவர் அவர்கள் வந்த படகொன்றின் உரிமையாளர் என்பதால் குறித்த நபரின் படகு அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. ஏனைய 7 படகுகள் தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...