Ranjan g
அரசியல்இலங்கைசெய்திகள்

சுதந்திர தினத்தில் ரஞ்சனுக்கு விடுதலை!!

Share

எதிர்வரும் சுதந்திரதினத்தில் ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியை தொலைபேசி வழியாக நேற்று தொடர்புகொண்ட சஜித், மனித நேயத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுக்குமாறும் கோரியுள்ளார் என தெரியவருகின்றது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற சஜித், ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்து சுகநலம் விசாரித்துள்ளார். ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான பதில் கிட்டும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல ரஞ்சனின் விடுதலைக்காக சர்வதேசம் செல்லகூட தயாராகவே இருக்கின்றோம் எனவும் சஜித் அறிவித்துள்ளார்.

#LocalNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சி.டி.விக்ரமரத்ன 1
இலங்கை

பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்கள்.

  முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது...

disa
இலங்கை

கூட்டணியை குறித்து எங்களுக்கு கவலை இல்லை – திஸ்ஸ அத்தநாயக்க.

தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறுபான்மைக் கட்சிகள், தமது உரிமைகளுக்காகத் தனியானதொரு புதிய...

semmani 18
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வையிடவுள்ள சர்வதேச தரப்பினர்.

நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு, யாழ்ப்பாணம் – செம்மணிப் பகுதியில்...

சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...