Anantha Palitha
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எரிபொருள் விலையை அதிகரித்து இலாபம் ஈட்டுகிறது அரசு!

Share

எரிபொருட்களின் விலையை அதிகரித்ததன் மூலம் கொள்ளை இலாபத்தை அரசாங்கம் பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த இதனை தெரிவித்துள்ளார்.

மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்யாமல் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இறக்குமதி செய்தமையால், எரிபொருட்களின் விலை உயர்வு அதிகரிக்கப்பட்டது.

சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை 20 சதவீதத்தினால் குறைந்துள்ளது.

எனினும் அரசு இலங்கையில் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. இதன் மூலம் பெற்றோல், ஒக்டைன் 92 ரகத்தின் லீற்றர் ஒன்றில் அரசாங்கத்திற்கு 65 ரூபா தேறிய இலாபமாக கிடைக்கின்றது.

ஒக்டேயின் 95இல் 93ரூபாய் இலாபமாக கிடைக்கின்றது. சுப்பர் டீசலில் 48 ரூபாய் இலாபமாக கிடைக்கின்றது.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பால், மக்களின் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...