image 1531977056 33813cf8fa
செய்திகள்இலங்கை

நிவாரணப் பொதி விநியோகிக்கும் சதொச!!

Share

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 8 பிரதான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி 1,998 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

குறித்த நிவாரணப் பொதி விநியோக நடமாடும் சேவை இன்று முதல் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்.

இது தொடர்பில் , வர்த்தகத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பந்துல குணவர்த்தன உரையாற்றுகையில் , பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய விற்பனை நிலையங்களை காட்டிலும் சதொச விற்பனை நிலையத்தில்அத்தியாவசிய பொருட்கள் நிவாரண விலையில் விற்பனை செய்யப்படுகின்றன .

பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நிவாரண அடிப்படையில் வழங்க அரசாங்கம் பல திட்டங்களை இதுவரை காலமும் சதொச நிறுவனம் ஊடாக முன்னெடுத்துள்ளது என தெரிவித்தார்.

மேலும், பண்டிகை காலத்தை முன்னிட்டு 8 பிரதான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப்  பொதியை 1998 ரூபாவிற்கு சதொச விற்பனை நிலையம் ஊடாக விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பொருட்களை வாங்கும்போது 95 ரூபா பெறுமதிமிக்க பப்படம் பொதியொன்று இலவசமாக வழங்கப்படவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...