king
உலகம்

மாற்றி எழுதப்படுகிறது 70 ஆண்டுகால வரலாறு!

Share

ரூத் எல்லிஸு, இவர்தான் பிரித்தானியாவில் தூக்கிலிடப்பட்ட கடைசிப் பெண்ணாவார், இவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, பிரித்தானிய ஜனாதிபதி மூன்றாம் சார்லஸ் அடையாளப்பூர்வமாக ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளார்.

தனது கூட்டாளியைக் கொலை செய்த குற்றத்திற்காக, 1955 ஆம் ஆண்டு அவர் தூக்கிலிடப்பட்டார். அவருக்கு “வரலாற்று ரீதியான அநீதி” இழைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் வழங்கிய ஆலோசனையின் பேரிலேயே மன்னர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

ரூத் எல்லிஸ், கடுமையான குடும்ப வன்முறை மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார் எனவும், இன்றைய காலகட்டத்தில் இந்த விடயம் வேறு கோணத்தில் அணுகப்பட்டிருக்கும் எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரித்தானிய நீதி அமைச்சர் டேவிட் லாமி, “70 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை எம்மால் மாற்ற முடியாது.

ஆனால், இது ஒரு விதிவிலக்கான வழக்கு என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய இந்த மன்னிப்பு ஒரு கருணைச் செயலாகும்.

பிரித்தானியாவில் 1965 ஆம் ஆண்டு கொலைக் குற்றங்களுக்கான மரண தண்டனை ஒழிக்கப்பட்டதுடன், 1964 ஆம் ஆண்டிலேயே அங்கு இறுதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

எனினும், பிரித்தானிய சட்டப்புத்தகங்களில் இருந்து மரண தண்டனை 1998 ஆம் ஆண்டிலேயே முழுமையாக நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரூத் எல்லிஸின் நான்கு பேரப்பிள்ளைகள் விடுத்த கோரிக்கையை அடுத்தே இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
” இது ரூத்தின் குடும்பத்தினருக்கு ஓரளவாவது நிம்மதியைத் தரும் என நம்புகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய சட்டப்படி, அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் மட்டுமே மன்னர் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தண்டனைகளைக் குறைக்க முடியும் என்பதுவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

Share
தொடர்புடையது
hourthis red sea Houthi Rebels Attack Cargo Ship In Gulf Of Aden
உலகம்

சர்வதேச கடற்பரப்பில் தாக்கப்பட்ட சரக்கு கப்பல் – உயிரிழந்துள்ள பணியாளர்கள்!

செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தெப் நீரிணைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது...

பஷார் அல் அசாத்
உலகம்

முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில்சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும்...

parlimen president 2
உலகம்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை – ஜனாதிபதியின் தீர்மானம்!

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயல்பாட்டு சபையில் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை...

fsgtyriujgb
உலகம்

கொலம்பியாவினை உலுக்கிய நிலநடுக்கம்.

இன்றைய தினம், மேற்கு கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாகவும் இதனால் நாட்டின்...