tamilnaadi 5 scaled
ஏனையவை

இன்றைய ராசி பலன் : 18 நவம்பர் 2024 – Daily Horoscope

Share

இன்றைய ராசி பலன் : 18 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 18.11.2024 குரோதி வருடம் ஐப்பசி 3, திங்கட் கிழமை, சந்திரன் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம் ராசியில் உள்ள சேர்ந்த சாகும், அனுஷம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வேலைவாய்ப்பை எதிர்நோக்கி கொண்டிருப்பவர்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். இன்று மாலை நேரத்தில் அன்புக்குரியவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டு. இன்று வேலை அல்லது வியாபாரம் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சூழல் சாதகமற்றதாக இருக்கும். இன்று அதிக ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில் தேவையற்ற இழப்பை சந்திக்க நேரிடும். பண விஷயத்தில் வியாபாரம் செய்யக்கூடியவர்கள் சற்று கடினமான சூழல் இருக்கும். இன்று நிலுவையில் உள்ள பணத்தை பெறுவதில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். இன்று நண்பர்கள் அல்லது உறவினர்கள் உதவியை பெறலாம். மாலை நேரத்தில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் சில மாற்றங்களை செய்தால் உங்களுக்கு நிச்சயம் வெற்றி பலன் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான விஷயத்தில் அலைச்சல் ஏற்படும். இன்று முக்கிய விஷயத்தில் மனைவியின் ஆலோசனை தேவைப்படும். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் வந்து சேரும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்க வாய்ப்பு உள்ளது. இன்று பொறுமையுடன் குடும்ப மூத்த உறுப்பினர்களின் உதவியுடன் பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்யவும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இன்று உங்கள் மனநிலையில் சஞ்சலம் இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். வேலையை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கவும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் குறித்து வாதிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள். ஆன்மீக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று சில நல்ல செய்திகள் தேடி வரும். நண்பர்களுடன் பிடித்த இடத்திற்குச் செல்ல நினைப்பீர்கள்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் அதிகரிக்கக் கூடிய நாள். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். இன்று எதிர்காலம் தொடர்பான முதலீடு செய்ய, நிறைய லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் சில மனக்கசப்புகளைச் சந்திக்க வாய்ப்புள்ளது. கடின உழைப்பிற்கு பின்னரே எந்த ஒரு செயலிலும் வெற்றி கிடைக்கும். இன்று உடல் நல பிரச்சனைகளை உடனே கவனிப்பது நல்லது.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சில காரணங்களால் உங்கள் மனம் அமைதியற்றதாக இருக்கும். உங்கள் வேலை தொடர்பாக சில சிரமங்கள் ஏற்படும். அரசாங்கம் தொடர்பான வேலைகளில் வெற்றி பெறலாம். குடும்ப உறுப்பினர்களுடன் விருந்து விழாக்களில் பங்கேற்பீர்கள். குழந்தையின் கல்வி தொடர்பாக இருந்த தடைகள் நீங்கும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் எந்த செயலிலும் கூடுதல் கவனம் தேவை. எந்த முக்கிய முடிவுகளை எடுப்பதில் நிதானம் அவசியம். சுப காரியங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று கடன் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்க்கவும். தந்தையின் கண் சம்பந்தமான சில பிரச்சனைகள் ஏற்படும். இன்று நீங்கள் நினைத்ததை விட பணம் அதிகமாக செலவாகும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகளும், தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. உங்கள் செயலில் மனைவியின் முழு ஆதரவு கிடைக்கும். அன்றாட தேவைக்காக அதிக பணம் செலவிட வாய்ப்புள்ளது. உங்களின் வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்யவும். பிள்ளைகளின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பீர்கள்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று வேலை, வியாபாரத்தில் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும். பணியிடத்தில் சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் புதிய வேலைக்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த சிறப்பான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வாழ்க்கைத் துணையின் உயர்வைக் கண்டு மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நிதிநிலை பலப்படும். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள். இன்று உங்களின் சிறப்பான செயல்பாட்டால் மரியாதை அதிகரிக்கும். உங்களின் உணவு மற்றும் பானங்களில் கூடுதல் கவனம் தேவை.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று எந்த வேலை செய்தாலும் அதிக ஆர்வத்துடன், உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். குடும்ப நலனுக்காக சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பெற்றோரின் ஆலோசனையை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று உங்களின் முயற்சி சிறப்பான பலனைத் தரும்.

Share
தொடர்புடையது
Gunmen
ஏனையவை

விமான நிலையத்தில் கைதான கடத்தல் கும்பல்.

இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...