vijay best dialogues 759
ஏனையவைசினிமாபொழுதுபோக்கு

விரைவில் தளபதியின் மெகாஹிட் திரைப்படத்தின் 2ம் பாகம்! – நிறைவேறுமா ரசிகர்கள் எதிர்பார்ப்பு?

Share

தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கி மிகப்பெரும் வெற்றிபெற்று வசூலை அள்ளிக் குவித்த திரைப்படம் துப்பாக்கி.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் – காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகிய இந்த திரைப்படம் மிகப்பெரும் வெற்றிபெற்றது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் இரண்டாவது பக்கம் தற்போது உருவாக்க உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் வெளியாகிய துப்பாக்கி திரைப்படம், இந்தி, பெங்காலி போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. துப்பாக்கி வெற்றிக்கு பிறகு விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைந்து கத்தி, சர்கார் படங்களில் பணியாற்றிய நிலையில், இந்த படங்களும் மிகப்பெரும் வெற்றிபெற்றன.

துப்பாக்கி படம் ரிலீசாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் தற்போது படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் இந்த முறை தயாரிப்பு உரிமத்தை சன் பிக்சர்ஸ் கலைப்புலி எஸ்.தாணுவிடம் இருந்து வாங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விஜய் நடிப்பில் உருவாக்கவுள்ள இந்த பக்கத்தின் இயக்குநர் மற்றும் ஏனைய நடிகர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

Gunmen
ஏனையவை

விமான நிலையத்தில் கைதான கடத்தல் கும்பல்.

இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...