யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏ – 9 வீதியில் கொடிகாமம் – கோயிலாமனை சந்திக்கு அருகில் கார் மற்றும் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
அதில் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
மீசாலை கிழக்கைச் சேர்ந்த ந.பகீரதன் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment