36646765 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மின்சாரம் தாக்கிக் குடும்பப் பெண் பரிதாபப் பலி!

Share

மின்சாரம் தாக்கிக் குடும்பப் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை துறையடி வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான அஹமது உசனார் லத்தீபா உம்மா என்பவரே இன்று காலை 5.30 மணியளவில் இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

வீட்டின் முன்பகுதியில் அமைந்திருந்த தகரக் கொட்டிலுக்கு மேலாகச் சென்ற மின்சார இணைப்பில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளது எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

மரணமடைந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...