german
உலகம்செய்திகள்

மேலாடையின்றி பொதுவெளியில் குளிக்க பெண்களுக்கு அனுமதி!

Share

ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லின் நகரில் பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக பொது நீச்சல் குளத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து அவர் செனட்டின் புகார் அலுவலகத்தில் ஆண், பெண் என்று பாகுபாடு பார்க்க கூடாது. விருப்பப்பட்டால் ஆண்கள் போன்று பெண்களும் மேலாடையின்றி குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட ரீதியாக அனுமதி கிடைத்துள்ளது. அவருக்கு மட்டுமல்ல பெர்லின் நகரில் பெண்கள் மேலாடையின்றி பொது நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெர்லின் அதிகாரிகள் பெண்கள் பாகுபாட்டிற்கு ஆளாகியிருப்பதை உணர்ந்து, பெர்லினின் குளங்களுக்கு வரும் அனைத்து பார்வையாளர்களும் இனி மேலாடையின்றி குளிக்க உரிமை பெற்றுள்ளனர் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த அனுமதி எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்த தகவல் இல்லை.

இருப்பினும், இந்த அனுமதி வியப்பை தந்தாலும், இந்த முடிவிற்கு பலர் வரவேற்பை அளித்து வருகின்றனர்.

#world

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...

pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...