பிரபல கவிஞரும் அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத் தலைவருமான புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் காலமானார்.
86 வயதான இவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 9:33 மணியளவில் உயிரிழந்துள்ளார் .
1935-ம் ஆண்டு கோவையில் பிறந்து ராமசாமி எனும் இயற்பெயர் கொண்ட இவர் 1968ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த குடியிருந்த கோவில் திரைப்படத்துக்கு பாடல் எழுதியதன் மூலம் திரை உலகில் கால் பதித்தார்.
இப் படத்தில் இவர் எழுதிய “நான் யார், நான் யார்” என்ற பாடல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலமாகவுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய “தெறி” திரைப்படத்தில் இடம்பெற்ற தாய்மை எனும் பாடலை எழுதியவரும் இவரே.
சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசின் விருதை புலமைப்பித்தன் நான்கு தடவைகள் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment