tamilni 271 scaled
உலகம்செய்திகள்

நூற்றாண்டுகளாக காணாமல் போன உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு

Share

நூற்றாண்டுகளாக காணாமல் போன உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு

உலகில் இதுவரையில் அங்கீகரிக்கப்பட்ட கண்டங்களாக 07 கண்டங்கள் திகழ்கின்றன இந்த வரிசையில் உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்தக் கண்டம் 375 ஆண்டுகள் நீருக்குள் மறைந்திருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள், கடல் தளத்தில் மீட்கப்பட்ட பாறை மாதிரிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் இந்தப் புதிய கண்டத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இந்தப் புதிய கண்டத்தினை விஞ்ஞானிகள் ஜீலந்தியா (Zealandia) என்று அழைக்கிறார்கள், இது நியூசிலாந்துக்கு அருகே அமைந்துள்ளது.

இந்தப் புதிய கண்டமானது 94 சதவீதம் நீருக்கு அடியில் மூழ்கியுள்ளதாகவும், 49 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகவும் அமைந்துள்ளது, இது மடகாஸ்கர் தீவை காட்டிலும் 6 மடங்கு பெரிய அளவாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதில் நியூசிலாந்தை போல சில தீவுகள் உள்ளதாகவும், இங்குள்ள முன்னதாக கிடைக்கப்பெற்ற பாறை மாதிரிகளை ஆய்வு செய்ததிலிருந்து இந்தக் கண்டம் சுமார் 375 ஆண்டுகளாக நீருக்குள் மறைந்திருந்ததாக தெரியவந்துள்ளது.

உலகில் தற்போது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா,வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அந்தாட்டிக்கா ஆகிய 7 கண்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, விரைவில் ஜீலந்தியா (Zealandia) என்ற இந்த புதிய கண்டத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...